சாயந்தமருதில் நாளை (23) தலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த பூங்கா திறந்து வைக்கப்படுகிறது. யாரோ ஒருவன் தோட்டமிட்டு விதை விதைக்க எவர்களோ அதனை அறுவடை செய்கின்றனர். உண்மை நிலை ஊர் அறியும். இந்த பூங்காவுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அனைத்து கருத் திட்டங்களையும் முன்னெடுத்தவர் முன்னாள் கல்முனை மேயர் ஸிராஸ் மீராசாகிப்தான். இந்த விடயத்தை விருப்பு, வெறுப்பு, அரசியல் பேதமின்நி ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
ஒரு கோடியே 67 இலட்டசம் ரூபாவை அவர் தனது பதவிக் காலத்தில் ஒதுக்கி இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். முதற்கட்டமாக அவரால் ஒதுக்கப்பட்ட வெறும் 67 ஆயிரம் ரூபாவுக்குள்தான் தற்போதைய கல்முனை மாநகர சபை நிர்வாகம் இந்த வேலைத் திட்டத்தை நிறைவு செய்து நாளை திறந்து வைக்கிறது. இதன் காரணமாக இது ஓர் அவசர, அவசரமான திறப்பு விழா என்றுதான் கூற முடியும். மிகுதியாக உள்ள ஒரு கோடி ரூபாவை செலவு செய்து இந்தப் பூங்காவை முதல் தரமான வசதிகள் கொண்டதாக புதிய நிர்வாகம் அமைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
ஏன்தான் இவ்வாறு அந்தப் பூங்காவின் அபிவிருத்திப் பணிகளை முடித்து நாளை அரைகுறையாக அதனை திறந்து வைக்கிறார்களோ தெரியாது. சிலவேளை, சாய்ந்தமருது விரைவில் தனியான உள்ளுராட்சி சபையாகப் பிரகடனமாகப் போகிறது என்பதற்காகத்தான் இந்த அவசர, அவசரமோ? அவ்வாறு புதிதாக சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையாக பிரகடனமானால் இந்த பூங்கா வேலைகள் எல்லாம் தங்கள் கைளிலிருந்து மாறி விடும் என்ற அச்சம் இவர்களுக்கு இருக்கலாம் அல்வா?
அல்லது முன்னாள் மேயர் சிராஸின் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை கோரிக்கை நிறைவேறினால் அவரது செல்வாக்கு ஊரில் கூடி விடும் என்பதற்காக அதனைக் குறைக்கும் நடவடிக்கையோ தெரியாது.
சரி அவரைத்தான் விடுவோமே. ஹாரீஸ் எம்.பியையுமா இவர்கள் மறந்து விட்டனர்.? அவர்தான் இந்தப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இன்று அவரது பெயரைக் கூட நினைவுக் கல்லில் பதிக்கவில்லையே? ஏன் இந்த ஓரவஞ்சேமா தெரியாது? நிஸாம் காரியப்பரும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்தான். ஹாரீஸ் எம்.பியும் முஸ்லிம் காங்கிரஸ்தானே. நற்பணிகளில் கூட ஏனிந்த ஓரவஞ்சமோ நானறியேன். அவர் அந்தத் தொகுதி எம்.பி. என்ற காரணத்துக்காவது கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனது நண்பரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் அவர்களுக்கும் இந்த பூங்காவுக்கும் என்னதான் தொடர்போ தெரியவில்லை. அவரது பெயர் என்றால் அங்கு ஜொலிக்கிறது.
அஷ்ரஃப் ஞாபகார்த்த பூங்கா என்ற பெயர்ப்பலகையில் சாய்ந்தமருது என்று பொறிப்பதற்குக் கூட இவர்களுக்கு மனமில்லை. சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஜெமீல் கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது வேதனையான விடயம்தான்.
இறுதியாக என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே...தன்னாலே எல்லாம் ஒருநாள் வெளிவரத்தான் வேண்டுமல்லவா?

0 comments :
Post a Comment