கடும்போக்குவாத ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மின்வலு மற்றும் எரிசத்கி அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட ரூ. 1.5 பில்லியன் நஷ்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தற்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
குறித்த ஊழல் இடம்பெற்ற போது தான் அமைச்சராக இருக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இதற்கான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் நிலக்கரி இறக்குமதியின் போதே இம்முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரமுறை ஒழிக்கப்படவேண்டும் என ஹெல உறுமய அறிக்கை வெளியிட்டு வந்ததும், சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியதும், இது போன்ற காரணங்களுக்காகவே பெரும்பாலும் அமைச்சர்கள் முன் அனுமதியின்றி ஜனாதிபதியை எதிர்த்து பேசுவது தொடர்பில் மிகக் கவனமாக இருப்பதாக தொடர்ச்சியாக எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment