அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமியைக் காயப்படுத்திய நபர், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (23) இடம்டிபற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 வயது சிறுமி படுகாயமடைந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் தலைமறைவாகியிருந்தார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில், நேற்று (24) வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோது, அரசாங்க உத்தியோகத்தர் மூலமான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment