அமைச்சர் றிசாட் பதியுதீனால் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியின் பெயர்க் கல்லினை மர்மநபர்கள் உடைத்துச் சேதமாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாண்டியன்குளம் பிரதேச செயலர் பிரிவில் நமணங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் றிசாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை வன்னிப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து வவுனிக்குளத்திலுள்ள பிரதான தபாலகத்தைத் திறந்து வைத்துள்ளார். இவ்விஜயத்தின்போது வவுனிக்குளத்தின் அயல் கிராமங்களான கொல்விளாங்குளம், நமணங்குளம், பாலிநகர், அம்பாள்புரம் ஆகிய கிராமங்களுக்கான மின் இணைப்புகளின் பிரதான மின்பிறப்பாக்கிகளையும் திறந்து வைத்துள்ளார்.
இதன்போது திரைநீக்கம் செய்வதற்காக நமணங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர்க்கல்லை மர்ம நபர்கள் இரவோடு இரவாக உடைத்துச் சேதமாக்கியுள்ளனர். இதனால் இப்பெயர்க்கல் சேதமடைந்த நிலையிலேயே அமைச்சர் றிசாட் பதியுதினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment