எம்.ஏ தாஜகான்-
மதங்களுக்கிடையிலான நல்லுறவினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இன்று (2014.10.10) கலாச்சார நிகழ்வு பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வு ESDFP எனும் திட்டத்திற்க்கேற்ப தமிழ் முஸ்லிம் சிங்கள பாடசாலை மாணவர்களையும் இந்து பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்த்தவ சமய பெரியார்களின் பங்கு பற்றுதலுடனும் இடம் பெற்றது.
பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம் பொத்துவில் சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களினால் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துமுகமாக கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் அவர்கள் கலந்து கொண்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment