காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்-படங்கள்


பழுலுல்லாஹ் பர்ஹான்-

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல் கடந்த 07-10-2014 செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஜூமைறா பௌசில் இடம்பெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்று கூடலின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர ,மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி),இலங்கை ரூபாவாஹிணி கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளரும்,சிரேஷ்ட அறிவிப்பாளருமான யூ.எல்.யாக்கூப் ,இலங்கை ரூபாவாஹிணி கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் இர்ஸாட் ஏ காதர்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும்,பீகாஸ் சிட்டி கெம்பஸின் பணிப்பாளருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.என்.முபீன்,கே.எல்.எம். பரீட்,முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் ,காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆதம் லெப்பை (பலாஹி) ,நகர சபை உறுப்பினர்கள்,ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் உப செயலாளர் எம்.எச்.எம்.அன்வரின் புதல்வர் அர்சக் அஹமட் மட்டும் இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸின் புதல்வர் இஷ்பாக் அஹமட் ஆகியோர் மாலை அணிவிக்கப்பட்டு சான்றிதழும்,பரிசும்,விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணாமலை ஆகிய மாவட்டங்கலிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஆற்றல்;களை பிரதிபலிக்கும் பாட்டு,கதை,கவிதை,அறிவுக்களஞ்சியம்,நாடகம் போன்ற பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

இங்கு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக முஸ்லிம் ஊடகவியலாளர்களின் அமைப்பொன்றை உருவாக்குவதன் அவசியம் பற்றி ஆராயப்பட்டதுடன் கருத்துரைகளும் வழங்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து வருகைதந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அன்பளிப்புக்கள் காத்தான்குடி மீடியா போரத்தினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒன்று கூடலில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய குழுவினருக்கு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலானது கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக இடம்பெற்றதோடு இதனை ஏற்பாடு செய்த காத்தான்குடி மீடியா போரத்திற்கும், அதன் தலைவர் மௌலவி முஸ்தபா ,செயலாளர் ஜெலீஸ்,பொருளாளர் பழீலுர் ரஹ்மான் , உப தலைவர் நூர்;தீன்,உப செயலாளர் அன்வர்,நிர்வாக செயலாளர் டீன் பைரூஸ்,தகவல் பணிப்பாளர் சஜி ஆகியோருக்கும் அதன் உறுப்பினர்களான சாதீகின்,பஸால் ஜிப்ரி,சபீக்,பழுலுல்லாஹ் பர்ஹான் ஆகியோருக்கு இங்கு வருகைதந்த முஸ்லிம் ஊடவியலாளர்கள் நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :