அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – ஒரு எண்ஜாலமே மிஞ்சுவது ரூபா 727.8 மட்டும்

பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்-

ரசாங்க ஊழியர்களுக்கு, 2015 வரவு செலவுத் திட்டத்தில் ஆகக்குறைந்த சம் பளத்தை 15.000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக சம்பளத்தில் 20 வீதமாகப் பெற்றுவந்த ஓய்வூதிய உரித்தற்ற விசேடபடி, ஓய்வூதிய உரித்துள்ள சம்பளக் கட்டமைப்பில் சேர்க்கப்படும் எனவும் அறிவித் துள்ளது.

இந்த அதிகரிப்பானது வெறும் எண்ஜாலமேயன்றி வேறில்லை. உண்மையில் அதி கரித்த சம்பளம் என்ற பெயரில் மிஞ்சுவது ரூபா 727.8 மட்டுமேயாகும்.

அதாவது, 11,730 ரூபா சம்பளம் பெறுபவருக்கு, இச்சம்பளத்தின் 20 வீதம் 2346 ரூபா விசேட படியாக வழங்கப்படுகிறது. அது சம்பளக் கட்டமைப்பில் சேர்க்கப்படும் போது அடிப்படைச் சம்பளம் 14.076ரூபாவாக அதிகரித்து, விசேட படி இல்லாமல் போகின்றது. இவ்வாறு கட்டமைப்பில் சேர்க்கப்பட்ட சம்பளம் 15.000 ரூபாவாக ஆகும்போது 924 ரூபா மாத்திரம் அதிகரிக்கின்றது.

சம்பளக் கட்டமைப்புக்குள் வரும் விசேடபடி 2346 ரூபாவுடன் மொத்த அதிகரிப்புத் தொகை 3270 ரூபாவுக்கு விதவைகள், அனாதைகள், ஓய்வூதியக் கழிப்பனவு 6 வீதம் ரூபா 196.2ஐ உண்மை அதிகரிப்பு 924 ரூபாவில் இருந்து மீள அறவிடப்படும் போது அதிகரித்த சம்பளம் என்ற பெயரில் மிஞ்சுவது ரூபா 727.8 மட்டுமேயாகும்.

அரசாங்க ஊழியர்களுக்கு, 2006 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அமுல்படுத்தப் பட்ட ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 11.730 ரூபாவாகும். இத்தொகை கடந்த 2922 நாட்களாக அதாவது 8 வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை.

இக்காலப்பகுதியில், அதாவது 2005 ஜூனில் 4 அங்கத்தவர்களைக் கொண்ட சாதா ரண குடும்பமொன்றின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 25,344 ரூபாவாக இருந்தது. அது 2014 ஜூனில் 50,792 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த 3287 நாட்களில் அதாவது 9 வருடங்களில் 25,448 ரூபாவால் அதிகரித்துள்ளது. ஜூலைமாத வாழ்க் கைச் செலவுப் புள்ளி 183.2ஆக உள்ளது.

கொழும்பு நுகர்வோர் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின்படி, 9 வருடங்களில் அதிகரித்த வாழ்க்கைச் செலவு 25.448 ரூபா. வரவு செலவுத் திட்டத்தின்படி 8 வருடங்களில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப் பனவுகள் ரூபா 13,073.8 மட்டும். இக்குடும்பம் மாதாந்த வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க இன்னும் 12.374.2 ரூபாவைக் கடன்பெற வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :