ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவித்த பின்புதான் அது தொடர்பில் ஆலோசிப்போம் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கும் என பொதுவாக அபிப்பிராயப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் சிந்திப்பதற்கு கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் விட்ட அரசியல் ரீதியிலான வரலாற்றுத் தவறுகள்தான் காரணம். இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பதாயின் முஸ்லிம்கள் நலன்கள் தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைப்பது (முன்னர் வைத்த கோரிக்கைகள் உட்பட) என்றும் அந்தக் கோரிக்கைகளை அரசு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றினால் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பது குறித்து ஆலோசிக்க முடியுமென்றும் அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் கருத்துகள் இருக்கலாம்.
ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராகவும் இன்னொரு சந்தர்ப்பம் உள்ளதுதானே? அதனையும் ஒரு பலப் பரீட்சையாக அல்லது அரசுடன் பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்த முடியுமல்லவா?
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தாங்கள் அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் முஸ்லிம் சமூகம் தொடர்பிலான ஒரு சில அதுவும் குறைந்தளவிலான அபிலாஷைகளைக் கொண்ட கோரிக்கைகளையாவது முன்வைத்து அதனையேனும் நிறைவேற்றித் தருமாறு அரசினை வலியுறுத்தலாம்தானே?
அவ்வாறு இலகுவில் தீர்க்கப்படக் கூடியதான முன்வைக்கப்படக் கூடிய கோரிக்களை நான் இவ்வாறு பட்டியலிடுகிறேன்.
1. கிழக்கிலும் வடக்கிலும் முஸ்லிம் மக்களுக்கு உள்ள காணிப் பிரச்சினைகள்.
2. மீள்குடியேற்றம்.
3. முஸ்லிம் பிரதேசங்களின் துரித அபிவிருத்தி திட்டங்கள்.
4. தொழில் வாய்ப்புகள்

5. ஒலுவில் துறைமுகத்தை செயற்பாட்டுக்கு கொண்டு வருதல்.
6. பௌதீக வளங்கள் உட்படலான அனைத்து வசதிகளையும் கொண்ட முஸ்லிம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குதல்.
7. இராஜதந்திர பதவிகளில் முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்குதல்.
மேற்சொன்னவற்றில் ஒரு சிலதையேனும் வரவு – செலவுத் திட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவு தருவதற்கான கோரிக்கைகளையாவது முன்வைத்து செய்து முடிக்கலாம் அல்லவா?

0 comments :
Post a Comment