சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு




துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

ம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளரும்,அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளரும்,சம்மந்துறைத் தொகுதி அமைப்பாளருமான அல்-ஹாஜ். ஏ.எம்.எம். நௌஷாட் அவர்களின் நெறிப்படுத்தலின் அடிப்படையில் இம்முறை கா.பொ.த உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களின் நலன் கருதி, வழங்கப்படவிருக்கின்ற புலமைப் பரிசுத் திட்டத்தின் கீழ் நடைபெறவிருக்கின்ற பயிற்சி நெறிக்கான (கணனி, ஆங்கிலப் பயிற்சி நெறி) அனுமதியும், தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும், இன்று (2014.09.06) காலை 9.30 மணியளவில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் தவிசாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பெருந் திரளான மாணவர்கள் கலந்து சிறப்பித்ததோடு ஏ.எல். பதூர்தீன் (அதிபர், ஹாடி உயர் தொழில் நுட்பக் கல்லூரி – அம்பாறை) அவர்களும், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ். ஏ.எம்.எம். நௌஷாட் அவர்களின் இந் நெறிப்படுத்தலானது இம் முறை கா.பொ.த உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களின் வாழ்வில் ஒளியூட்டும் ஓர் அங்கமாகவே சம்மாந்துறை மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :