ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களை பெயரிடுவது தான், எனவும் இதனால் அவசரமாக எந்த தீர்மானங்களையும் எடுக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீரவிடம் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்தில் இணைய போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவருடன் பேசும் போதே ரணில் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்கினாலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை தானே பெயரிட உள்ளதாகவும் இதனால் அவசரப்பட்டு தீர்மானங்கள் எதனையும் எடுக்க வேண்டாம் என்றும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.தவி

0 comments :
Post a Comment