மழலையர் கல்வியில் அனாச்சார கலைவிழாக்கள்.

ழலை கல்வி பயிலும் சிறார்களுக்கு கல்வி அவசியமா.,? இல்லை அனாச்சார கலைவிழாக்கள் அவசியமா? என்று மக்களிடையில் கேள்வி எழுதந்துள்ளது!

பெற்றோராகிய நாம் இன்று தமது குழந்தைகள் கல்விகளுக்காக எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சிகளும் அவர்களின் எதிர்காலத்தை முன்னகர்த்தி செல்வதற்குரிய அத்திவாரமே. இதன் அடிப்படையில் சிறார்கள் கல்வி ஓர் முக்கிய இடத்தை வகிக்கின்றது ஆனால் இன்று மழலை கல்வி வேறு திசைக்கு திருப்பப்படுகின்றது.

கிழக்கு இலங்கை வாழ் சிறார்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் (Nursery) நிலையங்களில் கல்வியை விட நமது காச்சாரத்தில் இல்லாத அனாச்சார விழாக்கள் அரங்கேற்றுவதில் கல்வி பயிற்றுணர்கள் முன்மூர்வமாக திகழ்கின்றார்கள்.

மழலை கல்வி பயிலும் சிறார்களுக்கு ஆண்டு இறுதியில் ஓர் கலைவிழாவை நடாத்தி அதில் அவர்களின் கல்வி ,சமையம், விளையாட்டுக்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தி சிறார்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதென்பது ஓர் நல்ல விடையம்,

ஆனால் இன்று அப்படி அல்ல கலைவிழாக்கள் எனும் போது அதில் சினிமா பாட்டுக்களும் அதற்குரிய கூத்துக்கள் இருந்தால் மட்டுமே கலைவிழாக்கள் சிறப்படைகின்றதொரு நோக்கிலேயே சிறார்களுக்கு சினிமா பாட்டுக்களும் அதற்குரிய கூத்துக்களும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.

ஒரு கலைவிழா நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு ஒரு மழலைக்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாத காலஎல்லை தேவைப்படுமென்று நினைக்கின்றேன் அந்தவகையில் ஓர் ஆண்டு மாத்திரமே கல்வி பயிலும் சிறார்களுக்கு மீதி எத்தனை மாதங்கள் கல்வி கற்பிக்கப்படும் என்பதை சற்று சிந்திக்க தோணுகின்றது.

இங்கு கலைவிழாக்கள் நடாத்துகின்றார்கள் என்பது ஒரு முக்கிய விடையமே அல்லாதிருந்தாலும் சிறார்களுக்கு ஆண்டில் இறுதியில் கலைவிழாக்களை நடாத்தி சிறப்பிப்பதென்பது மகிழ்ச்சிகரமான விடையம்தான் ஆனால் இதில் கவனிக்கப்படவேண்டிய விடையம் சிறார்களுக்கு சினிமா பாட்டுக்களுக்கு கூத்துக்கள் புகட்டப்படுவதென்பது ஒரு குற்ற உணர்வாகவே தோணுகின்றது.

மழலைகளுக்கு புகட்டப்படும் ஆரம்ப கல்வியே அவர்களின் எதிர்கால கல்விக்கு அடி அத்திவாரமாக அமைகின்றது காரணம் மழலைபருவத்தில் கற்றுக்கொள்ளும் விடையங்களே அவர்கள் மனதில் உறுதிநிலை கொண்டுவிடுகின்றதென்பது விஞ்ஞான விளக்கம்.

இது தவிர ஒரு நாள் அரங்கேற்றத்துக்கு பல மாதங்கள் கற்பிக்கப்படும் சினிமா பாட்டுக்களும் கூத்துக்களும் எந்தளவுக்கு சிறார்களின் மனங்களில் நிலை கொண்டிருக்கும்மென்பதை சற்று சிந்தித்து பாருங்கள்..!!சிறார்களுக்கு கல்வி சார்ந்த நல்ல பண்புகள் விளையாட்டுக்கள் தவிர ஏனைய சினிமா கூத்துக்கள் புகட்டுவதென்பது எந்தவொரு சிறந்த பெற்றோர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் விடையமாகும்.

ஆகையால் சிறார்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இதை உங்கள் கவனத்தில் ஏற்றுக்கொண்டு அனாச்சாரமான நிகழ்ச்சி நிரல்களை நீக்கிவிட்டு நமது கலாச்சாரம் ,கல்வி, விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு சற்று முயற்சிப்பது சிறந்ததென்பது எனது கருத்தாகும்.

முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :