த.நவோஜ்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 'சஹன அருன' கடன் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி திவிநெகும (வாழ்வின் எழுச்சி) சமூதாய அடிப்படை வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட முப்பது பயனாளிகளில் பத்து பயனாளிகளுக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கி வழங்கப்பட்டது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வே.நவிரதன், வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.பற்குணராஜா, வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் என்.விஜிதன், திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், வாழ்வின் எழுச்சி திட்ட முகாமையாளர் இ.காளிராஜா, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகதர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment