கிழக்கு மாகாண பண்பாட்டலுவலர்கள் திணைக்களம் நடாத்தும் கூத்துப்போட்டிகள்-2014

எம்.ஜே.எம். முஜாஹித்-


கிழக்கு மாகாண பண்பாட்டலுவலர்கள் திணைக்களம் நடாத்தும் 2014ம் ஆண்டுக்கான பாரம்பரிய கூத்துப்போட்டி எதிர்வரும் 09ம், 10ம், 11ம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளதாக பணிப்பாளர் டபில்யு.எ.எல். விக்ரம ஆராச்சி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட போட்டி 09ம் திகதி செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று மத்திய காலாச்சார நிலையத்திலும், மட்டக்களப்பு மாவட்ட போட்டிகள் 10ம் திகதியும், புதன் கிழமை முனைக்காடு கலாசார நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

வடமோடிக்கூத்து, தென் மோடிக்கூத்து, சிந்து நடைக்கூத்து. வசந்தன் கூத்து, பறைமேனக்கூத்து என்பன போட்டியில் பங்குபற்றக்கூடிய கூத்துக்களாகும்.
மாவட்ட மட்டப் போட்டிகளில் 01ம், 02ம், 03ம், இடங்களைப்பெறும் கூத்துக்களுக்கு மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யபடும்.

11ம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும் மாகாண மட்டப்போட்டியில் 01ம், 02ம், 03ம் இடங்களை பெறும் கூத்துக்களுக்கு விருதுகள், பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுமெனவும் கலாசார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :