குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகளின் தென்னாபிரிக்க விஜயமும் அதனைத்தொடர்ந்த தென்னாபிரிக்க உப ஜனாதிபதியின் இலங்கை விஜயமும் தமிழ்த்தரப்புக்களுடன் மாத்திரம் மேற்கொண்ட சந்திப்புக்களும், ஐ.நா அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை அரசு செயற்படுத்தியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் என்பவற்றிலான அரச மற்றும் தமிழ்த்தரப்புக்களின் கவனஈர்ப்பு முயற்சிகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் அரசியல் தீர்வு தொடர்பில் மந்தநிலையினை வெளிப்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய புதிய அரசின் வகிபாகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் இந்திய விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டணி பா. ம. உறுப்பினர்களைச் சந்தித்த இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி இலங்கை அரசியல் தீர்வு முயற்சியில் 13வது அரசியல் யாப்பு நடைமுறையினை இலங்கையில் அமுல் நடாத்த தமது அரசு போதிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்குமென தெரிவித்திருந்தார்.
என்ற போதும் அதற்கு முன்னர் சிருபான்மையினருக்கிடையில் ( தமிழ் முஸ்லிம் தரப்பினர்) ஒரு கருத்தொருமைப்பாடு எட்டப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதனடியாக 13வது அரசியல் திருத்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் முஸ்லிம்களது அபிலாசைகளும் அடங்கியுள்ளது என்பதனை இந்திய அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளமை முஸ்லிம் அரசியல் போக்கின் வெற்றியாக கறுதப்படுகின்ற நிலையில் முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தினை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
13வது திருத்த மூலத்தின் மூலம் இணைந்த வடகிழக்கு முன்மொழிவில் முஸ்லிம்களது நிலைப்பாடு குறித்து தெளிவான முன்மொழிவுகள் முன்வைக்கப்படவேண்டும். 13வது திருத்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்ற போது பின்வரும் பிரச்சினைகள் குறித்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் உள்ளது.
அ. தற்போது பிரிந்த வடகிழக்கில் 37.12மூ மாக கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பினால் 17மூ சிறுபான்மையாக மாற்றப்படுவதும் அவர்களது அரசியல், உரிமை பாதுகாப்பு குறித்த கேள்விகளும்.
அ. தற்போது பிரிந்த வடகிழக்கில் 37.12மூ மாக கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பினால் 17மூ சிறுபான்மையாக மாற்றப்படுவதும் அவர்களது அரசியல், உரிமை பாதுகாப்பு குறித்த கேள்விகளும்.
இ. இணைந்த வடகிழக்கில் கிழக்கிட்கான தனியான நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகான அழகு பற்றி பேசப்படுகின்ற போதும் வடக்கில் வாழும் 8மூமான முஸ்லிம்களது அரசியல் தீர்வு குறித்து எழுந்துள்ள கேள்விகள்.
ஈ. இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் தொகையில் வடகிழக்கிற்கு அப்பால் வாழும் 2ஃ3 முஸ்லிம்களது அரசியல் தீர்வு குறித்த கேள்விகள் என்பன அவசரமாக தீர்வுகாணப்பட வேண்டியவையாகும்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கான தீர்வுப்பொறிமுறை குறித்து அவ்வப்போது பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக 1985ஆம் ஆண்டு கல்முனையில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி முஸ்லிம் பிரமுகர்கள் மாநாட்டில் முஸ்லிம்களுக்கான தீர்வாக 'வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகான அலகு' என்ற கோசம் முன்வைக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் பாண்டிச்சேரி, தென் ஆபிரிக்காவின் உள்ளே அமைந்துள்ள சிறிய இராச்சியங்கள், ரஷ்யாவின் லெனின்கிராட் என பல நாடுகளின் அரசியல் நடைமுறைகளை மையமாக வைத்து இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முஸ்லிம் அரசியல் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த போதெல்லாம் இக்கோரிக்கையை அழுத்தி வாசித்தமையும், முஸ்லிம் அரசியல் பலவினப்பட்டபோது அடக்கி வாசித்தமையையும் அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் பலமான அணியாக இருந்த காலமெல்லாம் இக்கோரிக்கையினை முன்வைத்தே வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சம்.
முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிளவுகளும் புதிய முஸ்லிம் சிறு கட்சிகளின் தோற்றமும் ஒட்டு மொத்த வடகிழக்கு முஸ்லிம்களின் கோரிக்கையில் நலிவினை ஏற்படுத்தியது. முஸ்லிகளின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூட தமது கட்சியின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நிலத்தொடர்பற்ற மாகான அழகு என்ற கோரிக்கையிலிருந்து நழுவிச்செல்ல வேண்டியேற்பட்டது.
தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவ்வப்போது இத்தனியலகு மாகாண கோரிக்கைகளை பேரினவாத கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என காரணம் காட்டி தப்பித்துக்கொண்டமையையும் காணமுடிகின்றது. 1997.03.31ம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் தந்தை செல்வாவின் ஞாபகார்த்த நிகழ்வில் அப்போது கட்சியின் பொதுச்செயலாளராகவும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமாகிய பா. ம. உ. ரவுப் ஹகீம் ஆற்றிய உரை தமிழ்த்தரப்பு மாத்திரமன்றி முஸ்லிம் தரப்பும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது.
அதில் 'தந்தை செல்வாவிற்கு நாங்கள் அனைவரும் அளிக்கும் மிகப்பெரிய அஞ்சலி இந்த இனப்பிரச்சினைக்கு அவருடைய அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக் கெனவும் ஒரு தனியான அரசியல் அழகு அமைய வேண்டும் என்று சொன்னாரோ அந்த அடிப்படையிலேயே சகோதரத்துவத்துடன் ஒரு சுமுகமான முடிவினை காண நாங்கள் எல்லோரும் கங்கணம் கட்டுவோமாக' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே போன்று 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை ஆதரிக்க முடியாமற்போனது ஏன் என்ற கட்சியின் கொள்கைப்பிரகடனத்தில் முக்கியமாக காரணம் குறிப்பிட்ட அம்சம் 'வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலத்தொடர்பற்ற அடிப்படையிலான சுயாட்சியை மஹிந்த அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஏற்று அமையவில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ற போதும் உட்கட்சி போட்டிகளில் தம்மை வெற்றியாளராக தடம்பதித்து அம்பாறை மாவட்டத்தின் ஒருசில சுயநல அரசியல் அழுத்தங்களுக்கு ஒத்திசைபாடி கிழக்கினுல்தான் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் இருக்கவேண்டும் என்ற தலைமைக்கான கயிரிழுப்புகளில்; கதிரையை தக்கவைத்துக்கொள்ளவும் காய்நகர்த்தல்களை முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ள முஸ்லிம் சமூகம் இடம்கொடுக்க முடியாது.
இந்தவகையில் வெறுமனே கரையோர மாவட்டம் என்ற ரீதியில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை மாத்திரம் கொண்டமைந்த கரையோர மாவட்டம் குறித்து கதைகளை கசிய விட்டு நாடிபிடிக்கும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பிரதிநிதிகள் களமிறங்கியிருப்பது முஸ்லிம்களது அரசியல் தீர்வு குறித்த விடயங்களில் அக்கட்சியினை சந்தேகிக்கும் நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை தள்ளிவிட்டிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அதன் தலைமை வடகிழக்கிற்கு வெளியே அமைந்திருந்தமையும்இ வடகிழக்கிற்கு வெளியே அது தனது முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளமையுமே காரணமாகும் என்ற உண்மை அரசியல் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆனால் தற்போதைய நிலையில் குறுகிய அரசியல் இலாபங்களுக்கு மத்தியில் சிலரது தன்னிச்சையான போக்குகள் தலைமைக்கு தலையிடியாக அமைந்திருப்பதனால் அவற்றினை தமக்கு சாதாகமான சூழ்நிலையாக மாற்றிக்கொள்ள தலைமை முயற்சிப்பது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு தீ வார்ப்பதாக அமைந்துவிடக்கூடாது.
எனவே இத்தகைய அரசியல் தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் தீர்வு குறித்த போதுத்தலத்திலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது.
அ. அரசு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றினை எட்டுவதற்கு முன்பதாக தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு பிரதேசத்தில் செயற்கையான பெரும்பான்மை சனத்தொகை பரம்பலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் புதிய மாவட்ட, பிரதேச எல்லைகளை மீளமைக்கும் நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை வடகிழக்கில் குறிப்பாக கிழக்கில் சிங்கள பெரும்பான்மை இனப்பரம்பலை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 13வது திருத்தச்சட்டம் குறித்த பேச்சில் இனரீதியான தனியான நிர்வாக அலகுகள் குறித்து பேசுவதற்கும் உடன்பாடெட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் முஸ்லிம் அழகு குறித்த தெளிவினை முன்வைக்க வாய்ப்பு அமைய அழுத்தங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு வெளிப்படுத்த வேண்டும்.
ஆ. வடகிழக்கிற்கு வெளியே வாழும் மக்களது பாதுகாப்புக் குறித்த ஒரு தெளிவான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும். தமிழரசுக்கட்சி வடகிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் தமது சாதக அரசியலை நோக்கி நகர முடியும் என்பதோடு அவர்களது அரசியல் நடவடிக்கையில் தாம் தலையிட்டு ஏனைய சமூகங்களிடம் இருந்து பிரித்து தனியாக்கிவிடுவதில்லை என்ற தெளிவான நிலைப்பாட்டினைக்கொண்டிருப்பதனை முன்னுதாரணமாக கொண்டு செயற்;திட்டங்களை முன்வைக்க முடியும். தற்போதைய இனவாத சூழ்நிலையில் இத்தகைய நிலைப்பாட்டு சாதக நிலை குறித்து ஆராய முடியும்.
தற்போதைய ஊவா தேர்தலில் எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்பது போல் முஸ்லிம் கட்சிகள் சீலைக்கடைக்கு எதிர்க்கடை அரசியல் செய்வது ஊவாவில் முஸ்லிம் அரசியல் குறித்த பல நடைமுறை சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை கண்கூடு.
இ. இலங்கை முஸ்லிம்களது அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் பெரும்பான்மைக்கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இவ்விடயத்தில் தலையை உள்ளிளுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அரசின் அழுத்தங்களுக்கும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விடயங்களுக்கும் பெரும்பான்மைக்கட்சிப் பிரதிநிதிகள் தயார் படுத்தளுக்குற்படுத்தப்பட வேண்டும்.
இ. இலங்கை முஸ்லிம்களது அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் பெரும்பான்மைக்கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இவ்விடயத்தில் தலையை உள்ளிளுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அரசின் அழுத்தங்களுக்கும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விடயங்களுக்கும் பெரும்பான்மைக்கட்சிப் பிரதிநிதிகள் தயார் படுத்தளுக்குற்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய செயர்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சரியான முன்னெடுப்புக்களை (டுழுடீலுp) செய்யவில்லையென்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கசப்பான உண்மையே. குறைந்தது நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கூட சாட்சியம் அழிக்கும் ஒரு பொரிமுறையைக்கூட அவை தேசிய செயற்திட்டமாக முன்வைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இத்தகைய சூழ்னிலையில் முஸ்லிம் சிவில் சமூகத்தை வழுப்படுத்தி இத்தகைய அரசியல் தலைமகளுக்கு அழுத்தக்குழுக்களாக செயற்பட தூண்டுதல் அழிப்பது முஸ்லிம் புத்தி ஜீவிகளது தலையாய கடமையாக அமைகின்றது. சர்வதேச அரசியல், சர்வதேச போராட்ட ஒழுங்குகள் பற்றி வாதப்பிரதி வாதங்களை முன்வைப்பது போன்று இலங்கை முஸ்லிம்களது உள் நாட்டு விடயங்களில் மௌனித்திருப்பது இன்னும் உசிதமான ஒரு அம்சமாக அமையாது என்பது திண்ணம்.

0 comments :
Post a Comment