இலங்கை அணியின் வீரர் டில்ஷானை இஸ்லாத்துக்கு வருமாறு அழைத்த-அஹமட் ஷெசாட்

லங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி.எம். டில்ஷானை இஸ்லாத்துக்கு வருமாறு பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷெசாட் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இஸ்லாத்துக்கு வந்தால் நேரடியாக சுவர்க்கத்துக்கு செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷெசாட் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷெசாட் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது.

இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:
கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அரங்கு நோக்கி இரு அணி வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் செஷாட், இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் பற்றிக் கூறியது கெமராவில் பதிவாகியுள்ளது.

ஷெசாட் கூறியது இதுதான் என்கிறது அந்த பதிவு: “முஸ்லிம் அல்லாத நீங்கள், முஸ்லிமாக மாறிவிட்டால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நேரடியாக சொர்க்கம்தான்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு டில்ஷான் என்ன பதில் கூறினார் என்பது 'சரியாகக் கேட்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெசாட் எதற்காக இதனைக் கூறினார் என்று அவரிடம் கேட்டபோது, நானும் தில்ஷானும் நட்புரீதியாக பேசிக்கொண்டோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :