கிழக்கு மாகாண முதல்வரினால் சர்வதேச சிறைச்சாலைகள் தினக்கொடி வழங்கும் நிகழ்வு

மு.மெ.ரசாட்முகம்மட்-

கிழக்கு மாகாணமுதல்வரினால் சர்வதேச சிறைச்சாலைகள்தினக்கொடி வழங்கும்நிகழ்வு திருமலையில்ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும்செப்டம்பர் 12 ஆம்திகதி சர்வதேச சிறைச்சாலைகள்தினத்தினைக் கொண்டாடும்நிகழ்வுகள்தற்போது சிறைச்சாலைகள்திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிறைச்சாலையும்,திருகோணமலை மாவட்ட சிறைச்சாலை நலன்புரிச்சங்கமும்இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறைச்சாலை தினக்கொடி வழங்கும்நிகழ்வினை இன்று (04)  கிழக்கு மாகாணமுதலமைச்சர்நஜீப்ஏ மஜிதுக்கு முதலாவது கொடி குத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில்திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர்யூ.ஜி.டபிள்யூ தென்னக்கோன், முதலமைச்சரின்செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், திருகோணமலை சிறைச்சாலை நலன்புரிச்சங்க தலைவர்சட்டத்தரனி ஜே.எம். லாகீர் அதன்உ ப செயலாளர் மொகம்மட்நியாஸ், தம்பலகாம பிரதேச சபைத்தலைவர்எஸ்.எம். சுபியான்  உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்கலந்து கொண்டனர். 

எதிர்வரும் 18ஆம்திகதி வரை அனுஸ்டிக்கப்படும்இக்கொடி விநியோக விற்பனை மூலம்கிடைக்கும்பணம்சிறைக்கைதிகளின்பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.  இதன்போது திருகோணமலை சிறைச்சாலைகளில்உள்ள குறைபாடுகள்தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர்கிழக்கு மாகாணமுதலமைச்சரின்கவனத்திற்கு கொண்டு வந்தார் இக்குறைபாடுகளை மிக வரைவில்உரிய அதிகாரிகளுடன்தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து தருவதாக முதலமைச்சர்உறுதியளித்துளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :