பொத்துவில் அல்/இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப்பிரிவினை வழி நடாத்துவதற்கான நிதி ஒதுக்கீடு

எம்.ஏ.தாஜகான்

பொத்துவில் உப வலய பாடசாலையின் உயர்தர விஞ்ஞான கல்வி அபிவிருத்தி  சம்பந்தமாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத்  அவர்கள் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தோடு முயற்சியினை மேற்கொண்டதற்கு  அமைவாக இஸ்லாமிக் ரிலீப் நிறுவனம் முதற் கட்டமாக பொத்துவில்  அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப்பிரிவினை வழி  நடாத்துவதற்கான நிதியினை ஒதுக்க முன் வந்துள்ளது.

இதற்கான ஆரம்ப நிதி 20000ரூபாவினை பொத்துவில் பிரதேச செயலகத்தின்  பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களின் முன்னிலையில் பொத்துவில்  அல் இர்பான் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் அவர்களிடம்  கையளிக்கப்பட்டது. இக் கையளிப்பு நிகழ்வில் உப அதிபர் என்.கே.அப்துல் அஸிஸ் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எஸ். வாசீத் மற்றும் மனித வள  அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கல்வி விடயத்தில் முன்னிற்கும் பொத்துவில் பிரதேச செயலாளருக்கு  பொத்துவில் கல்விச் சமூகம் நன்றியினை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :