ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமை ஆணையாளராக, ஜோர்தான் நாட்டின் இளவரசர் நியமனம்

க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக கடந்த ஆறு வருடங்களாக கடமையாற்றிய ‘நவிபிள்ளை’ என்று ஊடகங்களினாலும், இராஜதந்திர மட்டங்களிலும் அழைக்கப்பட்ட நவநீதம்பிள்ளை நேற்று (ஓகஸ்ட் 31, 2014) ஞாயிற்றுக்கிழமையோடு தனது பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

தன்னுடைய பதவிக்காலத்தில் சர்வதேச ரீதியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கவனம் பெற்றார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை முன்வைத்து ஐக்கிய நாடுகளின் விசாரணையை முன்னெடுக்க வைப்பதில் நவநீதம்பிள்ளை முன்னின்று செயலாற்றினார்.

அத்தோடு, சிரிய மோதல்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்ததுடன், நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.

இதனிடையே, “ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிலுள்ள நாடுகள் சர்வதேச ரீதியில் நடைபெறும் மோதல்களைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை” என்ற குற்றச்சாட்டை பாதுகாப்புச் சபையிலேயே நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தது அண்மையில் மிகுந்த அவதானம் பெற்றது. இந்த நிலையிலேயே, அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பதவியிலிருந்து இன்று ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமை ஆணையாளராக, ஜோர்தான் நாட்டின் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் இன்று முதல் (செப்டம்பர் 01, 2014) முறைப்படி பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :