அஸ்லம் எஸ்.மௌலானா-
பிரித்தானியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸ் இன்று புதன்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையுள்ளார்.
கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இன்று மதியம் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கல்முனைப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக, கலாசார விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர், கல்முனை மாநகர முதல்வரிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களின் பின்னர் இப்பிராந்தியத்தின் மீள்கட்டுமானப் பணிகள், மக்களின் வாழ்வாதாரம் போன்றவை தொடர்பிலும் சமாதான சூழலில் சமூகங்கள் இடையிலான நல்லிணக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பிலும் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கு விளக்கிக் கூறினார்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment