நிர்மாணத்துறையில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.


'மஹாபிமானி 2014 விருதுகளுக்கு நிர்மாணத்துறையில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.
இந்த நாட்டில் உள்ள 6 இலட்சம் மேசனமார், தச்சர், வர்ணப்பூச்சாளர், சிறந்த குழாய் நீர் பொருத்துனர், சிறந்த டைல் பொருத்துனர், மிண் ;இணைப்பாளர், கம்பி வளைப்போர், வேல்டிங் கலைஞர், நிர்மாண இயந்திரவியல் கைத்தெழில் கலைஞர்களுக்கான தேசிய நிர்மாண விருது விழா சிறந்த கலைஞர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மேற்கண்டவாறு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தகவல் தருகையில் -
மஹாபிமானி 2014 விருதுக்காக நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள சிறந்த நிர்மாண நிறுவனங்கள், மற்றும் சிறந்த நிர்மாண தொழில்சார் துறையினர் மற்றும் சிறந்த நிர்மாண கலைஞர்களை பாராட்டும் வகையில் மஹாபிமானி விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 பிரிவுகளின் கீழ் விருதுகள் பணப் பரிசில்கள், சான்றிதழ்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 2014 டிசம்பர் 18ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு கொழும்பு சுகாதாச உள்ளக அரங்கில் நடைபெறும்.

இதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும் அதன் கீழ் உள்ள நிர்மாண பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (இக்டாட்) விண்ணப்பங்கள் கோரி மாவட்டந்தோரும் தொழில்நுட்ப அலுவலகர் சென்று மாவட்டம், மாகாண மட்டத்தில் போட்டியாளர்களை தெரிபு செய்பவர். 

மஹாபிமானி 2014 தொடர்பான சகல தகவல்களையும் நிர்மாண பயிற்சி இக்டாட் நிறுவனத்தின் 011-2686092 அல்லது தேசிய நிர்மாண சங்கம் 0114-422222 ஆகிய தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நாட்டில் உள்ள சகல நிர்மாணத் தொழிலாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு ஓய்வூதியம், தொழி;ல்வாய்ப்பு, அடையாள அட்டை தமது தொழிலாளனுக்க என்.வி.கியு சான்றிதழ் தொழிலாளர்களுக்கான காப்புறுதி, பாதுகாப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகியன வழங்கப்படும். இதற்காகவே கடந்த வாரம் நிர்மாண அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை பாராளுமன்றத்தின் சட்டமுலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கடநத வாரம்; சீனவுடன் செய்து கொள்ளப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் நிர்மாணப்பணி பாதை அபிவிருத்திகளுக்காக 1 இலட்சம் நிர்மாணத்துறை சார்ந்த ஊழியர்கள் தேவையாக உள்ளது. ஆகவேதான் இலங்கை முதன் முதலில் நிர்மாண சம்பந்தமாக இந்த அதிகார சபை தாபிக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் விமல் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :