புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இரு வினாபத்திரங்களை ஒரு வினாப்பத்திரமாக வழங்குவதற்கு தீர்மானம்

2015ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இரு வினாபத்திரங்களை ஒரு வினாப்பத்திரமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது.

இவ்வாண்டிலும் இதற்கு முன்னரும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பரீட்சார்த்திகளுக்கு இரு வினாப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன. முதலாவது வினாப்பத்திரம் மாணவர்களின் நுண்ணறிவை பரிசோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 45 நிமிடங்களைக் கொண்டது. இரண்டாவது வினாப்பத்திரம் சிங்கள,தமிழ், ஆங்கில மொழிகள் தொடர்பான வினாக்களையும் மற்றும் சுற்றாடல், கணிதம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமாக அமைந்த 1.15 மணித்தியாலங்கைளக் கொண்டதாகும்.

இருப்பினும், இவ்வினாப்பத்திரங்களில் உள்ளடக்கப்படும் வினாக்கள் ஆரம்பப்பாடசாலை மாணவர்களின் உளநிலைக்கு ஏற்புடையதல்ல என்ற கருத்துக்கள் பல தரப்புக்களிலிமிருந்து வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவற்றைக் கருத்திற்கொண்டு ஆரம்பப் பாடசாலை மாணவர்களி;ன உளநிலைமைகளுக்கு ஏற்ப இரு வினாப்பதிரங்களாகவுள்ள இப்பரீட்சை வினாப்பத்திரங்களை ஒரு வினாப்பத்திரமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கேற்ப, மாதிரி வினாப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதியில் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சையில் ஏறக்குறைய 3 இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :