எம்மிடையே உள்ள முரண்பாடுகளை களையவேண்டிய தருணம் இதுவாகும் தமிழரசு கட்சி மாநாட்டில்- அமைச்சர் ஹக்கீம்

மிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­க­ளோடு எமக்குள் உள்ள முரண்­பா­டு­களை களைந்து எம்மை பிரித்­தாள நினைக்கும் கப­டத்­த­ன­மான அர­சியல் தந்­தி­ரங்­களை ஓரங்­கட்­டு­வ­தற்­கொ­ரு­அ­ர­சியல் நிலைப்­பாட்டை எமது சமூகம் சார்ந்து எடுக்க வேண்­டிய தருணம் தற்­போது வாய்த்­துள்­ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீதி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அத்­துடன் அடுத்து வரும் ஓரிரு மாதங்­க­ளுக்குள் இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸும் இந்த நாட்டின் யாப்பு குறித்த எமது நிலைப்­பா­டு­களை மிக தெளிவான முடி­வு­க­ளோடு ஒத்­த­தன்­மை­யுள்ள எல்லா சக்­தி­க­ளு­டனும் பேசு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம் எனவும் குறிப்­பிட்டார்.

இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,


இன்­றைய அர­சியல் சூழலில் ஆட்­சி­யா­ளர்கள் தமது மேலா­திக்க செறி­களை பல­வீ­ன­மாக எம்­மீது பிர­யோ­கிக்­கின்ற தரு­ணத்தில் சரி­யான பிரக்­ஞை­யோடு தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஆரம்ப போராட்ட வழி­மு­றை­களை மீண்டும் அதே தட­யத்தில் பய­ணிக்க வேண்­டிய அவ­சியம் இருப்­ப­தையும் மிகவும் இறுக்­க­மான சாத்­த­வீக போராட்­டத்தின் களம் ஒன்று அமைய வேண்­டிய அவ­சி­யத்தை நாம் மாத்­தி­ர­மல்ல சிறு­பான்மை இனத்­திற்கு சகல உரி­மை­களும் கிடைக்க வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­துக்­கின்ற அனைத்து சக்­தி­களும் வலி­யு­றுத்தும் தரு­ணத்­திலே தற்­போது உள்ளோம்.

இவ்­வா­றான கூட்டு முயற்­சியும் தேவைப்­பாடும் உண­ரப்­படும் வேளையில் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகம் எமக்­கி­டையில் இருக்­கின்ற பிர­தேச ரீதி­யான, பிராந்­திய ரீதி­யான முரண்­பா­டுகள் குறித்த ஆக்­க­பூர்­வ­மான, சினே­கபூர்­வ­மான பேச்­சுக்­களை மிகததெளி­வா­கவும் சரி­யான புரிந்­து­ணர்­வோடும் தாரா­ள­மான விட்­டுக்­கொ­டுப்­போடும் எமது மனத்தில் நல் சிந்­த­னையை ஆக்கிக் கொள்­ள­வேண்­டிய அவ­சியம் ஒவ்­வொரு தலை­மைக்கும் இருக்­கின்­றது. என்­ப­தனை உணர்ந்­த­வர்­க­ளா­கவே இந்த அவைக்கு வருகை தந்­தி­ருக்­கின்றோம்.

இந்த அடிப்­ப­டையில் நாம் தொடர்ச்­சி­யாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­க­ளோடு எமக்குள் உள்ள முரண்­பா­டு­களை களைந்து ஒரு­மைப்­பட்டு எம்மை பிரித்­தாள நினைக்கும் கப­டத்­த­ன­மான அர­சியல் தந்­தி­ரங்­களை ஓரங்­கட்டும் உறு­தி­யு­ட­னான ஒரு அர­சியல் நிலைப்­பாட்டை சமூகம் சார்ந்து எடுக்க வேண்­டிய தருணம் தற்­போது வாய்த்­துள்­ளது என திட­மாக நம்­பு­கின்றேன்.

தனியே தமிழ் பேசும் சமூகம் என வடக்கு கிழக்கில் வாழும் எம்­மிரு சமூ­கமும் அல்ல மலை­ய­கத்­த­லை­மை­க­ளோடும் தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரி­மையை தொடர்ந்தும் ஆத­ரித்து வந்த இட­து­சாரி தலை­வர்­க­ளோடும் தெற்கில் வாழும் நேர்­மை­யாக சிந்­திக்கும் நடு­நி­லை­வா­தி­க­ளோடும் நாம் பேசு­வ­தற்கு முய­ல­வேண்டும்.

உண்மையான கூட்டாட்சி தத்துவங்களின் சரியான பரிணாமங்களை மிக இலகுவான முறையில் கொண்டு செல்கின்ற, அறி வுறுத்துகின்ற சினேகபூர்வமாக இந்த விட யங்களை பரிமாறி கொள்கின்ற பரந்து பட்ட கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கும் இருக்கின்றது என தெரிவித்தார்.
வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :