யுத்த காலத்தில் மட்டுமல்லாது அதனை அண்டிய காலங்களிலும் இவ்விரு சமூகங்களும் பாதிப்புக்குள்ளானதும் அக்கசப்புணர்வுகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருவதையும் எவரும் மறுக்க முடியாது.
எனவே இவ்விரு சமூகங்களின் அரசியல் தலைவர்களின் மேல்மட்டப் பேச்சு வார்த்தைகள் அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கின்ற கசப்புணர்வுகளையும், சந்தேகங்களையும் களைவதற்கு வழி வகுக்க வேண்டும்'.
இவ்வாறு ஸ்ரீ.மு.காங்கிரஸின் தலைவர்களுக்கும் த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் நடைபெறவிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் பற்றி வழங்கிய ஊடக அறிக்கையில் கட்சியின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:-
பேரினவாதத்தின் அரசியல் காய் நகர்த்தல்களை புரிந்து கொள்ள போதாமலிருகின்ற இம்மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமக்குள் முரண்பாடான கருத்துக்களுடனேயே காணப்படுவார்கள். எனவே தமக்கு இருக்கின்ற அரசியல், அதிகாரம், கல்வி, தொழில் வாய்ப்பு, காணி, வர்த்தகம், வறுமை போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு சமூகம் மற்ற சமூகத்தின் மீது சாட்டிக் கொண்டிருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.
வடகிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் மத்தியில் காணப்படுகின்ற இவ்வாறான ஆறாப்புண்புகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற பேரினவாத சக்திகள் தொடர்ந்தும் இவ்விரு இனங்களின் தோழேறி சவாரி செய்து கொண்டியிருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறான நிலை தொடருகின்ற போது இவ்விரு சமூகங்களும் தமது இருப்பைக் கூட எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கும் அபாயநிலை ஏற்படும்.
இந்த விதமான அரசியல் சித்து விளையாட்டுக்களை புரிந்து கொள்ள தரணியற்றுக் காணப்படுகின்ற இச்சமூகங்களின் அடிமட்ட மக்களும், பொது மக்களில் பலரும் வெகுவாக பேரினவாதிகளின் கைக்கூலிகளினாலும், தமிழ், முஸ்லிம் உறவினை விரும்பாத சக்திகளாலும் குறிவைக்கப்பட்டு குளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்விரு சமூகங்களில் வாழ்கின்ற பாமர மக்கள் மத்தயில் காணப்படுகின்ற சந்தேகங்களையும், அவர்கள் அடி மனங்களில் புதைந்து கிடுக்கின்ற கிலேச உணர்வுகளையும் இதற்கு எதிராகப் பாவிக்க முற்படும் சக்திகளை தோற்கடிக்கும் வகையில் இவ்விரு சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இது பற்றிய பல்வேறு கலந்துரையாடல்களை முன் கூட்டியே நடாத்த வேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் மிக முக்கிய பொறுப்பாகும்.
இவ்வாறாக விரிவான கலந்துரையாடல்களின் பின்பு வெளியிடப்படுகின்ற தீர்மானங்களுக்கும், அல்லது ஒப்பந்தங்களுக்கும் நல்ல வரவேற்பும் உற்சாகமும் கிடைப்பதோடு இதற்கு எதிரான சக்திகளின் நடவடிக்கைகளும் பொது மக்களாலேயே முறியடிக்கப்படும் நிலை உருவாகும்.
இயல்பாகவே இவ்விரு சமூகங்களின் வியாபாரிகள், அரசியல்வாதிகள், விவசாயிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளே இவ்விதமான முயற்சிகளுக்கு முன்னிருக்கின்ற மிகப் பெரிய சவாலாகும். இது நாம் எல்லோரும் நன்கு தெரிந்து கொண்ட கசப்பான உண்மையுமாகும்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னெடுக்க நினைக்கின்ற இந்த முயற்சி காலத்தின் தேவையாக இருக்கும் அதே வேளை பாரிய சவால்களையும் எதிர்கொண்டு நிற்கின்றது.
இவ்வாறான முயற்சி ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் சமூகங்களின் விமோசனத்திற்கே மேற் கொள்ளப்படுகின்றது எனும் உண்மையை சகல மட்டத்திலுள்ளவர்களும் புரிந்து கொள்ளும் போதுதான் இதன் வெற்றி இலகுவாக அமையும்.

%2B(1).jpg)
0 comments :
Post a Comment