செந்தில் தொண்டமானுக்கு இ.தொ.கா. தலைமையகத்தில் வரவேற்பு




அஷ்ரப் ஏ சமத்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌபியவாணில் ஊவா மாகாணசபையில் வெற்றி பெற்ற 3 மாகாணசபை உறுப்பிணர்களுக்கும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர்கள் ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் அமர் தொண்டமானின் உறுவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர். முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இங்கு கருத்து தெரிவிக்கையில் -

அடுத்தவாரம் இ.தொ. கட்சிக்கு ஊவா மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சர் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் கலந்துரையாடலின் நான் சத்தியப்பிரமானம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். எமது கட்சி கடந்த முறை இ.தொ. கா சார்பில் ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றனர். இம்முறை 3 உறுப்பினர்கள் உள்ளோம். இதன் மூலம் ஊவா மாகாணத்தில் சிறந்த சேவையை ஆற்ற முடியும். எனது விபத்து சம்பந்தப்பட்டவரை பொலிசார் விசாரணை செய்கின்றனர். நாளை நீதிமன்றத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஆஜர்படுத்துவர். அதன் பின்னரே இவ் விபத்தில் சம்பந்தபட்டவர் பற்றி தெரியவரும். 

ஊவாமகாணசபையின் அரசாங்கத்தின் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனிக்கு இ.தொ.கட்சி 60ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளனா. அந்த மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனத் தெரிவித்தார்.
ஏனைய மாகாணசபை உறுப்பினர்களான ஆ.சிவலிங்கம், ஆ.கனேசமூர்த்தியும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :