சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபை தனியாக உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களது வழிகாட்டலில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் தீர்க்கதரிசனமான அரசியல் அதிகாரத்தினூடாக யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மூவினங்களுக்கும் குறிப்பாக எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற வறிய குடும்பங்களின் தேவைகளையும், கிழக்கு மாகாண மக்களது வாழ்வாதார, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வகிக்கின்ற நீர்ப்பாசன திட்டங்கள், வீதிகள், பாலம் அமைத்தல் போன்ற மற்றும் கல்வி வளர்ச்சிக்கான அபிவிருத்திகளும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் முயற்சியினால் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மூவினங்களும் வாழ்ந்து வருகின்ற பொத்துவில் பிரதேசத்தில் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த விடயம்.
இந்த அபிவிருத்தி திட்டத்தினை எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுகளில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம், பொத்துவில் பிரதேச உப வலயக்கல்வி வலய பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி.வி.கருணநாதன் , நீர்ப்பாசன மாகாணப் பணிப்பாளர் எந்திரி. எஸ்.திலகராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாண பணிப்பாளர் எந்திரி.ஏ.எல்.எம்.நிசார், மாகாண பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் எந்திரி. யு.எல்.எம்.நஸார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை பிரதம பொறியியலாளர் எந்திரி எஸ்.மஹிந்தன், மத்திய நீர்ப்பாசன அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எந்திரி கே.டி. நிஹால் சிறிவர்த்தன, வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் எந்திரி.ஐ.எல்.ஏ.பாரி, அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர்(மாகாணம்) பி.ரி.ஏ.ஜெயகுமார், நீர்ப்பாசன பொறியியலாளர்(மத்திய) டபிள்யு.யு.கே.சிரிவர்த்தன, கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சிறிசாந்த, அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரனி எம்.எம்.பஹிஜ், எஸ்.எம்.சபீஸ், யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ,றாசீக் உட்பட மத்திய, மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment