ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிப்பது உறுதி- ஒபாமா

.எஸ். வாதிகள் ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து "இஸ்லாமிய நாடு" என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ்.வாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் வாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாதிகள் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோரை பிடித்து சில தினங்களில் ஸ்காட்லாப்பை தலை துண்டித்து கொன்றனர்.

மற்றொரு பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலேயும் தலை துண்டித்து கொல்லப்பட்டுவிட்டதாக நேற்று தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் ஏற்கனவே ஸ்காட்லாப்பின் தலையை துண்டித்த வாதி மீண்டும் காட்சியளித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவை எச்சரிக்கும் தோனியில் பேசி, இந்நிலையில் ஸ்காட்லாப் கொல்லப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க தடவியல் துறை அதிகாரிகள் அது உண்மையானது தான் என தெரிவித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, தங்கள் நாட்டை சேர்ந்த இரு நல்ல இளைஞர்களை கொன்றதற்காக மட்டும் ஐ.எஸ். வாதிகளை அழிக்க முடிவெடுக்கவில்லை. ஒட்டுமொத்த அமெரிக்க பிராந்தியத்திற்கும், ஈராக் நாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அவர்களை அழிக்க வேண்டியது உலக நன்மைக்கு நல்லது என்று கூறினார். எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்தால் தோற்றுப்போவார்கள்.

அச்சுறுத்தல் வரும் போது தான் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எனவே தீவிரவாதிகளை ஒழிப்பது உறுதி என ஒபாமா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :