கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழக எகியா அரபாத்தின் 200 ஆவது உதைபந்தாட்டப் போட்டி






அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழக வீரர் எஸ்.எல்.எகியா அரபாத்தின் 200 ஆவது உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் கௌரவ அதிதியாகவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் சட்டத்தரணி றொசான் அக்தர், ஓய்வுபெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கல்முனை அல்பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.றசாக், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் என்பன மோதிக் கொண்டன.

இதன்போது 2-0 என்ற கோல் அடிப்படையில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம்,வெற்றியீட்டியது.

பரிசளிப்பு நிகழ்வில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழக வீரர் எம்.வை.எகியா அரபாத், அதிதிகள் மற்றும் பிரமுகர்களினால் விசேட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் மற்றும் அதன் வீரர் எகியா அரபாத்தின் உதைபந்தாட்ட சாதனைகள், அதிதிகளின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :