மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலிருந்த அட்டாளைச்சேனை சம்புக்களப்பு



சலீம் றமீஸ்-

மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலிருந்த சம்புக்களப்பு பிரதேசத்தினை கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலில் தேசிய காங்கிரஸின் அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் விவசாயிகள் இரு போக வேளான்மை செய்கையை மேற்கொள்ளும் வகையில் நீர்ப்பாசன திட்டங்கள் அபிவிருத்தி யெ;யப்பட்டுள்ளது.

இதன் பயனாக தற்போது சம்புக்களப்பு பிரதேச விவசாயிகள் மிக ஆர்வத்துடன் வேளான்மை செய்கைளை மேற்கொள்வதற்காக விவசாய நிலங்களை துப்பரவு செய்து வருகின்றனர். அன்மையில் இப்பிரதேசத்திற்கு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டனர். மற்றும் திணைக்கலங்களின் பல உயரதிகாரிகளும், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :