த.நவோஜ்-
வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 19ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழாவாக இடம்பெற்று வெள்ளிக்கிழமை தீர்த்த உற்;சவத்துடன் நிறைவடைந்தது.
இதன்போது வசந்த மண்டப பூசை இடம்பெற்ற பின்னர் ஆலயத்திலிருந்து கைலாயப் பிள்ளையார் பாசிக்குடா வங்கக் கடல் நோக்கி தீர்த்தமாடுவதற்கு சென்று அங்கு அபிஷேகப் பூசைகள் இடம்பெற்றதையடுத்து தீர்த்தமாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி தினமான வெள்ளிக்கிழமை விரதம் இருந்தவர்கள் தங்களுடைய விரதத்தினை பக்தி பூர்வமான அனுஸ்டித்தனர்.
தீர்த்தமாடும் நிகழ்வில் ஐநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆலயத்தினை சென்றடைந்ததும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment