அமரர் முகம்மது சமீம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை



அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பு தமிழ் சங்கத்தில் உப தலைவராக கடமையாற்றியவரும். இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் அறிஞர் மர்ஹூம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்சங்கத்தில் நடாத்தியது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைக் காப்பாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. 

அமரர் முகம்மது சமீம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. டாக்டர் தாசீம் அகமத், கலைச்செல்வன், தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பு சிவா, இலக்கியபணிக்குழு செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, மற்றும் கலைச்செல்வன் உரையாற்றினார்கள்.

அறிஞர் சமீம் கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர், கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு அரச சாகித்திய மண்டலப்பரிசு 3 வருடத்திற்கு முன் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. இருந்தும் முஸ்லீம் சமுகம் அவர் உயிருடன் இருக்கும்போது பாராட்டு நிகழ்வினை நடாத்த தவறிவிட்டனர். 

இருந்தும் கொழும்பு தமிழ் சங்கம் அவரை நினைவு கூறுவதை இட்டு நாம் பெருமைப்படுவதாக டாக்டர் தாசீம் அகமத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :