கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் இராஜினாமா..

ல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள பிரதி முதல்வர் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீதை பிரதி முதல்வராக நியமிப்பதற்கு ஏதுவாக அப்பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமைத்துவம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே தான் இப்பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மு.கா.சிரேஷ்ட பிரதித் தலைவர் அப்துல் மஜீத் கடந்த புதன்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபையில் உள்வாங்கப்படும் வரை தற்காலிகமாக பிரதி முதல்வராக பதவி வகிக்குமாறு கட்சியினால் அறிவுறுத்தப்பட்டு கடந்த ஜூலை மாதம் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :