”எம்.பி இல்லாததால் தான் இந்த நிலைமை" எனக் கூறுவதை சம்மாந்துறை மக்கள் நிறுத்த வேண்டும்..!!

துறையூர் ஏ.கே மிஸ்பஹுல் ஹக்- 

ம்மாந்துறை,தான் 40 வருடத்திற்கும் மேலாக தக்க வைத்து வந்த தனது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்து நிற்பது என்னவோ? உண்மைதான்.இதன் விளைவால் சம்மாந்துறை மக்கள் பல இடர்பாடுகளை அனுபவிப்பதும் உண்மை தான்.சம்மாந்துறைப் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இம்முறை பாதுகாக்க சம்மாந்துறை வாழ் மகன் ஒவ்வொருவரும் அதிக சிரத்தை எடுக்க வேண்டும்.இதனையும் மறுப்பதற்கு இல்லை.

அதற்காக யாவற்றையும் அரசியலால் தான் சாதிக்க வேண்டும் என்று அல்ல.
எமது சம்மாந்துறையை பொறுத்த வரையில் மக்கள் பலமிக்க ஊர்.அதை வைத்தே நாம் பலவற்றை சாதித்துக் கொள்ள இயலும். எனினும் நாம் சாதித்திருக்குறோமா? மக்கள் தொகை அதிகம் செல்வாக்குச் செலுத்தும் வணிகத்தில் எமது அண்மித்துள்ள ஊர்களுடன் ஒப்பிடும் போது எமது நிலை..??

"கலைத்துறை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள்? தங்கள் கற்றலுக்காக எமதூர் ஆசிரியர்களை நாடிச் செல்கிறார்கள்?" இதுவும் அரசியல் பலத்தால் தான் சாதிக்க வேண்டியதா?

எமது பொடுபோக்குகளிற்கும்,எமது குறைகளுக்கும்,அசமந்த போக்கிற்கும் நியாயம் கற்பிக்க எம்.பி இல்லாத குறையை சுட்டிக் காட்டி காட்டியே யாவற்றையும் மறைத்துக் கொண்டிருக்கிறோம்.

எம்.பி இருந்தால் மாத்திரம் சாதித்து விடுவோமா..?
அப்போது நாம் என்ன கூறுவோம் தெரியுமா..?

"நாம் தெரிவு செய்த அரசியல் வாதிகள் ஒழுங்கில்லை"

இப்படி சொல்லிச் சொல்லியே! எமது குறைகளையும் எம்மால் சாதிக்க முடியாதவற்றையும் இன்னுமொருவர் தலையில் போட்டு தப்பித் கொள்வோம். இவை எல்லாவற்றிற்குமான காரணத்தை அலசி அறியாது தடுக்க "எம்.பி இல்லாததால் தான் இந்த நிலைமை" என்ற கருத்து சம்மாந்துறை மக்களிடையே அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது.

முதலில் சம்மாந்துறை அரசியல் பலம் குன்றிய ஊரா..?

இரண்டு மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட ஊர் அரசியல் பலம் குன்றிய ஊரா..?

கிழக்கு மாகாணத்தில் எந்த ஊரில் இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் உளர்..?

அதில் ஒருவர் கிழக்கு மகாண அமைச்சர்..!
தனிப் பிரதேச சபையை கொண்ட ஊர்..!
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இனைப்பாளரை தன்னகத்தே கொண்ட ஊர்..!
மு.கா,தே.கா இன் உயர் பீட பல உறுப்பினர்களைக் கொண்ட ஊர்..!
ஜனாதிபதியின் அமைப்பாளர்கள் பலரை தன்னகத்தே கொண்ட ஊர்..!

இவ்வளவும் கொண்ட ஊர் அரசியல் பலம் குன்றிய ஊரா?
இவ்வளவு அரசியல் வலிமை இருந்தும் நாம் கூறுவது..?

"எம்.பி இல்லாததால் தான் இந்த நிலைமை"

இவ்வளவு அரசியல் வலிமை இருந்தும் பலவற்றை சாதிக்க தவறிய நாம்,பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்தால் மட்டும் எமது பிரச்சனையைத் தீர்த்து விடுவோமா?

அரசியலால் சாதிக்க முடிந்ததைத் தானே சாதிக்க முடியும்..??

முதலில் எமது குறைக ளை இனங்கண்டு,ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்திற்கும் வழி அறிவோம்.

அதை விட்டு விட்டு,குறை கூறிக் கூறியே அரசியல் தலைமைகளின் மேல் தப்பை போட்டு தப்பித்துக் கொள் லாமல் எமதூர் அறிவியல்,புவியியல் போன்ற அனைத்து வளங்களைக் கொண்டும் எமது பிரட்சினைகளைத் தீர்க்க ஒன்றினைந்து முயற்சிப்போமாக.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :