மஹேல ஜயவர்தனவினை கௌரவப்படுத்தும் வகையில் முத்திரை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தபால் சேவைகள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் மஹேல ஜயவர்தனவினை கௌரவப்படுத்தும் வகையில் முத்திரை ஒன்று வெளியிடுவது தொடர்பில் ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது. கிரிக்கெட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்திருந்தார். நான் கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைவர் மட்டும் அன்றி நிறைவேற்று குழு உறுப்பினராகவும் உள்ளேன். எனவே அடுத்த நிறைவேற்று குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி அமைச்சருக்கு அறிவிக்க உள்ளோம். அடுத்தபடியாக தபால் தினைக்களத்திற்கும் இது தொடர்பில் செயற்பட வேண்டியதுள்ளது. ஆகவே எமது அமைச்சு இது தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தி தகவல்கள் கிடைத்த பின்னர் தீர்வை அறிவிப்போம்.
0 comments :
Post a Comment