சுகாதார சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிக்கலில் விழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னம்பெரும தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷக்களின் கொள்ளைகளால் பிரச்சினைகளை தீர்க்க முடியாதுள்ளதென கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் சுகாதார சேவையுடன் தொடர்புடைய 11 அமைச்சர்கள் இருப்பதாகவும் ஆனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பிரச்சினைகளைத் தீர்க்க ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கௌரவ சேவையான வைத்திய மற்றும் தாதி சேவைகளுக்கு இடையில் மோதல் வலுப்பெற்றுள்ளதாகவும் அதன் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் மான்னம்பெரும குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் ஒரு பிரச்சினையையும் தீர்க்காமல் அரசாங்கம் யுத்தத்தை முன்காட்டி தப்பித்துக் கொண்டதாகவும் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் சென்றும் சுகாதார துறையை வளப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment