பாடசாலைகளில் கட்டடங்கள் கட்டுவதற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை விடவும் பாடசாலைகளிலிருந்து சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.
நிந்தவூர் கஸ்ஸாலி வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 3 மாடிக் கட்டத்திற்hன அடிக்கல் நடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்வியிலாளர்கள், கல்வி அதிகாரிகள். நிந்தவூர் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பாடசாலைக்கு பௌதிக வளம் முக்கியமானதுதான். அடைவிடவும் முக்கியமானது அப்பாடசாலையின் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பும் பாடசாலைச் சமூகத்திற்கிடையிலான பொறுப்புமிக்க செயற்பாடுகளும்.
கல்வியானது கட்டடங்களில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. கட்டடங்கள் இல்லாமலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறலாம்.
எமது பிரதேச பாடசாலைகள் குடிசைகளாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு வந்து அர்ப்பணிப்புடன் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கல்விக்கு மதிப்பளித்து ஆசிரியத்துவத்திற்கான கௌரவத்திணை பாதுகாத்து கல்வி போதித்திருக்கிறார்கள்.
எமது பிரதேச பாடசாலைகள் குடிசைகளாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு வந்து அர்ப்பணிப்புடன் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கல்விக்கு மதிப்பளித்து ஆசிரியத்துவத்திற்கான கௌரவத்திணை பாதுகாத்து கல்வி போதித்திருக்கிறார்கள்.
அத்தகைய ஆசிரியர்களிடம் கற்றவர்கள் நல்ல அடைவுகளைப் பெற்றிருக்கிறார்கள், அன்று மாணவர்களாக இருந்தவர்கள் இன்று சமூகத்தினால் மதிக்கப்படக் கூடிய நற்பிரஞைகளாக உள்ளனர்.
ஆனால் தற்காலத்தில் பாடசாலைகளில் எத்தனையோ வாய்ப்பு வசதிகள் இருந்தும், எதிர்பார்க்கக் கூடிய அடைவுகளை அடைய முடியாதுள்ளது. பாடசாலைகளில் உள்ள பௌதிக வளங்கள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்று சிந்திக்கும் நாம் பாடசாலைகளினூடாக சிறந்த பிரஞைகள் உருவாக வேண்டும் என்று சிந்திப்பது குறைவாகவுள்ளது.
நல்ல பிரஞைகளை சமூகத்திற்கு வழங்க வழங்கும் சிறந்த நிறுவனமே பாடசாலையாகும். நுல்ல பண்புகளைக் கொண்ட சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்கும் பொறுப்பையும் பாடசாலைகள் கொண்டிருக்கின்றன. அதை நிறைவேற்ற வேண்டியது அதிபர், ஆசிரியர்கள் உட்பட்ட பாடசாலை சமூகத்தின் தலையாக பொறுப்பு என கூற விரும்புகின்றேன்.
பாடசாலை நிர்வாகம் சீராக இயங்குமாயின் அந்தப் பாடசாலை எல்லாவற்றிலும் சிறந்ததாக விளங்கும். இன்று எமது பிரதேச பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பாடசாலைகளில் காணப்படுகின்ற பௌதிக வளங்கள் நிறைவு செய்யபடுவதில்லை என அரசியல் வாதிகளைக் குறைகூறும் பாடசாலைச் சமூகம் பாடசாலையின் நற்பெயருக்காவும் அப்பாடசாலையிலிருந்து சமூகத்திற்கு நல்ல பிரஞைகளை வழங்க வேண்டுமென்பதற்காகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
நமது பிரதேச பாடசாலைகளிலேயே நமது எதிர்கால சந்ததியினரின் கல்வி தங்கியுள்ளது. நகரப்புற பாடசாலைகளில் காணப்படும் வசதிகள் இப்பாடசாலைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்; என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
நமது பிரதேச பாடசாலைகளிலேயே நமது எதிர்கால சந்ததியினரின் கல்வி தங்கியுள்ளது. நகரப்புற பாடசாலைகளில் காணப்படும் வசதிகள் இப்பாடசாலைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்; என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், வசதிகள் ஏற்படுத்தப்படுகின்ற அளவிற்கு நமது மாணவர்களின் ஆற்றல்களும் திறன்களும் அடைவுகளும் அதிகரிக்கப்படுவது அவசியமாகும். .
ஆசிரிய சமமின்மையால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. பாடசாலைகளில் ஆசிரிய சமப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு ஒரு பொதுவான கொள்கை பின்பற்ற வேண்டிய Nவையுள்ளது. குறிப்பாக அரசியல் தலையீடுகள் அற்றதொரு பொதுக் கொள்கையினூடாக ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற வேண்டும். இடம்பெறும் ஆசிரிய இடம்மாற்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளேன் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம் என அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகளின் முன்னேற்றத்திலும் மாணவர்களின் வாழ்க்கைப் பண்புகளிலும் கல்வி வளர்ச்சியிலும் ஆசிரியர்களின் வகிபங்கு இன்றியமையாதது. அது தவிர, பாடசாலை நிர்வாகத்தின் முழு முயற்சியினூடன செயற்பாடும் அவசியமாகும். ஆப்போதுதான் அப்பாடசாலையை தரமுள்ள பாடசாலையாக மாற்ற முடியும்.
சிறந்த பாடசாலைகளினூடாகவே சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் சிறந்த பாடசாலைகளாக நமது பிரதேச பாடசாலைகள் மிளிர வேண்டுமாயின் அதிபர் ஆசிரியர்கள் உட்பட பாடசாலைச் சமூகம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென வேண்டுகின்றேன்.
அவ்வாறான ஒரு நிலை ஒரு பாடசாலையில் காணப்படுமாயின் அப்பாடசாலை சிறந்த பாடசாலையாக உருவாக்குவதுடன் அப் பாடசாலையிலிருந்து சிறந்த பிரஞைகளையும் உருவாக்க முடியுமெனக் குறிப்பிட விரும்புவதாகவும் மாகாண சபை உருப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மேலும் குறிப்பிட்டார்.
_Copy1.jpg)
0 comments :
Post a Comment