புதன்கிழமை(27) குச்சவெளி பிரதேச செயலக செந்தூர் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மதுரங்குடா பிரதேசத்தில் 45வயதுடைய நான்கு பெண் பிள்ளைகளின் தாயான நா.சாந்தி என்பவர் பி.ப.4:40 மணியளவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி அகால மரணமடைந்த சம்பவத்தை அடுத்து (28) வியாழக்கிழமை அக்கிராம மூவின மக்களும் வீதியில் இறங்கி போக்குவரத்தை தடுத்து காட்டு யானைகளிடமிருந்து தங்களது உயிரை காப்பாற்றுமாறும் மின்சார வேலியை உடன் அமைத்துத்தருமாறும் கோரிக்கை விடுத்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கையில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மாவட்ட பொருதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்த புஞ்சி நிலமே அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இது குறித்து தெரியப்படுத்தியபோது அதற்கான நஸ்டஈட்டினை தான் பெற்றுத்தருவதாகவும் அப்பிரதேசத்திற்கான மின்சார வேலியினை வெகு சீக்கிரமாக அமைத்துத் தருவதாகவும் அளித்த வாக்கறுதிக்கு அமைவாக போராட்டம் கைவிடப்பபட்டது.
பின்னர் மேலும் குச்சவெளி பிரதேச செயலாளருடன்; மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தொடர்பு கொண்டதற்கிணங்க அப்பிரதேசத்திற்கு நாளை(29) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணியளவில் குறித்த அதிகாரிகள் விஜயம் செய்து அதற்கான உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவும் கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment