யாழ் மாநகர சபைக்கு 80 மில்லியன் ரூபா செலவில் தீயணைக்கும் இயந்திரங்கள் கையளிப்பு - படங்கள்

ஜே.எம்.வஸீர்-

யாழ் மாநகர சபைக்காக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 80 மில்லியன் ரூபா  செலவில் கொள்வனவு செய்யப்பட்ட தீயணைக்கும் இயந்திரங்களை உள்ளுராட்சி மற்றும் மாகாண  சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் யாழ் மாநகர முதல்வர் யு.டி. யோகேஸ்வரி  பற்குணராசாவிடம் கையளிக்கும் நிகழ்வு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின்  வளாகத்தில் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இத்திட்டத்தின் கீழ் தீயணைக்கும் வாகனங்கள் மூன்றும் அதற்காக ஒரு நிலையான நிருவாகக் கட்டிடத்  தொகுதியும் யாழ் மாநகர சபை வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. 

இத்தீயணைக்கும் வாகனங்களையும் அதற்கென நிலையான கட்டிடத் தொகுதியினையும் யாழ் மாநகர  சபைக்கு வழங்கியதனால் தமது மாநகர சபை கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு  நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அதனைப் பெற்றுத் தந்த அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கு யாழ் மாநகர சபை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் மாநகர  முதல்வர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர். ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, அமைச்சரின் இணைப்புச்  செயலாளர் பொறியியலாளர் எம்.எஸ். நஸீர் பணிப்பாளர் என்.ரி.எம். சிறாஜூத்தீன  மற்றும் யாழ் மாநகர சபையின் பொறியியலாளர் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :