ஒலுவில் துறைமுக எல்லையில் இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் இயங்கி வரும் 'ஹைறு நவல் கிராப்ட் படகு உற்பத்தி ஸ்தாபனத்தினால்' உருவாக்கப்பட்ட முதலாவது இராட்சத மீன் பிடிப்படகு நேற்று(28) ஒலுவில் துறைமுகத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஹைறு நவல் கிறாப்ட் கம்பனி முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் இஸட்.எம்.ஹைறு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், இலங்கை முதலீட்டுச் சபை பணிப்பாளர் திரு.ஜயசுந்தர, ஒலுவில் துறைமுக அதிகார சபை முகாமையாளார் எம்.சலீம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம்:-
'இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் 60அடி நீளமும், 16 அடி அகலமும் கொண்ட இரு தட்டுக்களையுடையதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இம்மீன்பிடிப்படகின் விற்பனை விலை ரூபாய் 48 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் நமது நாடு அதிக வெளிநாட்டு வருமானத்தைப் பெறக்கூடியதோடு, நமது பிரதேச மக்களுக்கும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக உள்ளது. எனவே அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் உதவக் கூடிய இவ்வபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு நல்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment