கடந்த (27) புதன்கிழமை குச்சவெளி பிதேச செயலகத்ததிற்குட்பட்ட புடவைக்கட்டு மதுரங்குடா பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தமிழ் குடும்ப பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் தமக்கான மின்சார வேலி அமைத்து தரும்படி வீதிமறியல் போராட்டத்தில் இறங்கினர் இதன்போது குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் உறுதிமொழியை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
நேற்று (29) வெள்ளிக்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் மாகாண சபை உறுப்பினர் அன்வர்இ குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவன விலங்கு திணைக்களத்தின் அதிகாரிகள்இகுறித்த பிரதேசத்தின் கிராம சேவகர் பிரதேசத்திக் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சங்கங்களின் தலைவர்கள் உட்பட புடவைக்கட்டு கல்லராவ சங்கங்களின் மூவின தலைவர்களும் பங்கேற்றனர்.
இதன்போது பிரதேசத்தின் நிலைப்பாடு குறித்து இதுவரைக்கும கடற்படை சிப்பாய் உட்பட சுமார் ஒன்பது நபர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருப்பதாகவும் தமது பிரதேசத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறும் கேட்டதோடு
வன விலங்கு அதிகாரியால் ஏற்கனவே குறித்த பகுதிக்கான பாதுகாப்பு தொடர்பாக திட்டமிடப் பட்டதாகவும் அதற்கான நிதி தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் அதற்கான நிதியை மாவட்ட பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்றுத் தருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் கூறினார்.
தற்காலிகமாக காட்டு யானைகளை விரட்டுவதற்காக யனை வெடிகள் குறித்த பொலிஸ் நிலையத்தில் கையளிக்க பட்டிருப்பதுடன் அதனை உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும்
மேலும் தாம் எதிர்வரும் மாதம் 5 6 ம் திகதிகளிலிருந்து குறித்த பிரதேசத்துக்கான பாதுகாப்பு வேலி அமைக்க முதற்கட்ட நடவடிக்கையாக பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது மாத்திரமன்றி யானை தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தவர்களுக்கான நஸ்ட ஈட்டு கொடுப்பணவுக்கான தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் தமது திணைக்களத்தால் பெற்றுத்தர முடியும் என்ற தீர்மானம் வன விலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment