கடந்த 13 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களினால் பலஸ்தீன தரப்பில் இதுவரை 500க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் உடனடி யுத்த நிறுத்தத்தைக் கோரியுள்ளது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்.
இஸ்ரேலிய இராணுவத்தினரின் உயிரிழப்பும் அதிகரித்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் இது குறித்து கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் பான்கீமூன் இஸ்ரேலை கண்டித்திருந்ததுடன் இன்றைய தினம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரியுள்ளதுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கெய்ரோ சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் மாத்திரம் 100 பலஸ்தீனர்களும் 13 இஸ்ரேலிய இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 20 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் அதேவேளை அதில் 18 பேர் இராணுவ சிப்பாய்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பலஸ்தீன தரப்பில் உயிரிழந்தவர்களில் 80 வீதமானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment