பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாபெரும் இப்தார் நிகழ்வு நேற்று (18) அக்கரைப்பற்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீமும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், விஷேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்களான எம்.ஏ.அன்ஸில், எம்.ஏ.தாஹிர், எம்.எஸ்.அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் எஸ்.எம்.ஏ.கபூர், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எம்.வாஹீட் உள்ளிட்ட பல மார்க்க அறிஞர்கள் கல்விமான்கள் ஆகியோரும் கலந்து கொண்டர்.இந்நிகழ்வின்போது அளுத்கம, தர்க்காநகர் மற்றும் வேருவளை பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் விஷேட உரையினையும் நிகழ்த்தினார்.இந்த மாபெரும் இப்தார் நிகழ்வில் சுமார் 2 ஆயிர்த்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment