பொறல்லை ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற ஜும்ஆவில் பௌத்த தேரர்கள் கலந்துகொண்டனர். சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தரான பேராசிரியர் கும்புருகமே வஜிதர தேரர் தலைமையில் சுமார் ஏழு பௌத்த தேரர்கள் இந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.
தேரர்களின் நன்மை கருதி பெரல்ல ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இன்றை ஜும்ஆ பிரசங்கம் சிங்கள மொழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பௌத்த மற்றும் முஸ்லிம் சமயங்களுக்கு இடையில் பிரச்சினைகளை மேற்கொள்ள சில சக்திகள் மேற்கொள்கின்ற நிலையில் இரு சமூகங்களுக்கும் இடையில் சகவாழ்வினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
\




0 comments :
Post a Comment