அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையமாட்டேன்- SSP மஜீட்

மைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையோ அல்லது கலந்துரையாடலையோ தான் மேற்கொள்ளவில்லை என பொத்துவில் எஸ்.எஸ்.பி. மஜீத் தெரிவித்தார்.

நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியது உண்மை. ஆனால், எனது எதிர்கால அரசியல் மற்றும் எந்தக் கட்சியில் சேர்வது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. அவ்வாறு எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதில்லை. 

கிழக்கு மாகாணத்தில் (அம்பாறை மாவட்டத்தை பிரதான தளமாகக் கொண்டு) புதிதாக உருவாகவுள்ள ஐக்கிய முஸ்லிம் கட்சியில் (United Muslim party) சேர்ந்து கொள்ளுமாறு உதுமான்கண்டு நபீர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 ஆனால், அந்த அழைப்பினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மிக விரைவில் எனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நான் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :