எம்.வை.அமீர்-
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசாரா ஊழியர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் அல்ஹிக்மா சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி சேகுடீன் அவர்களது அனுசரணையுடன் இன்று (2014-07-21) தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிற்றுண்டிச்சாலை கட்டிடத்தில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசாரா ஊழியர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் றிபாயிஸ் முஹம்மட் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா சக ஊழியரும் மௌலவியுமான ரம்சீன் அவர்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் அவர்களும் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்களும் விரிவுரியாளர்கள் பிரயோக விஞ்ஞான பீட நூலகத்தின் பிரதி நூலகர், கல்வி சாரா ஊழியர் சங்கத்தலைவர் வை.முபாரக் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் அவர்களது குடும்ப உறவினருமாக பெரும்திரளானோர் பங்கு கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment