சலீம் றமீஸ்-
பொத்துவில் பிரதேசம் நீண்ட காலமாக அபிவிருத்திப் பணிகளில் புறக்கனிக்கப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தினாலும்ää இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலில் கடந்த பல வருட காலமாக பொத்துவில் பிரதேசத்தில் பல வரலாற்று அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை சகித்துக் கொள்ள முடியாத சில அரசியல் வாதிகள் பொத்துவில் மக்கள் மத்தியில் பிரதேச வாத உணர்வுகளை தூண்டி வருவது பொத்துவில் மக்களின் எதிர் காலத்தினை இருள் அடையச் செய்யும் விடயங்கள் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச உப – கல்வி வலயம் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் பொத்துவில் பஹ்றியா வித்தியாலயத்தில் பொத்துவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில் இடம் பெற்ற போது இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் உரையாற்றுகையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் ஒரு வார காலத்திற்குல் திறந்து வைக்கப்படுமென சில அரசியல் வாதிகள் பொத்துவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக வாக்குறுதி அளித்தனர்.
இக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இருந்த போதிலும் நீண்ட காலமாக இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா அவர்களிடம் பொத்துவில் பிரதேச மக்களுடைய நீண்ட கால கோரிக்கையான தனியான பொத்துவில் கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தேன் கல்வி அமைச்சருடைய ஆலோசனை பெற்று கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தேன்.
முதலில் பொத்துவில் பிரதேசத்திற்கான உப கல்வி வலயத்தை ஆரம்பித்து விட்டு பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா எங்களிடம் உறுதி அளித்தார்.
முதலில் பொத்துவில் பிரதேசத்திற்கான உப கல்வி வலயத்தை ஆரம்பித்து விட்டு பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா எங்களிடம் உறுதி அளித்தார்.
இதன் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சிலே கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா தலைமையில் கல்வி அமைச்சின் உயரதிகாரிகளும் பொத்துவில் பிரதேச அரசியல் தலைமைகளும் பொத்துவில் பிரதேச கல்விமான்களும் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியாக உப - கல்வி காரியாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கான அதிகாரங்களை வழங்கவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டதுடன் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப - கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக தகுதி உடைய ஒருவரை தெரிவு செய்யுமாறு கூட்டத்தில் கேட்கப்பட்டபோது பொத்துவில் பிரதேச அரசியல் தலைமைகள் கல்விமான்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கோட்டக்கல்விப் பணிப்பாளராக கடமை புரியும் ஜனாப் ஏ.ஏ.அஸீஸ் அவர்களை பொத்துவில் பிரதேசத்தின் உப - கல்வி வலயத்திற்கு பணிப்பாளராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கான நியமனக் கடிதமும் கல்வி அமைச்சின் செயலாளரினால் கல்விப்பணிப்பாளர் அஸீஸிக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் சிலரினால் வேறு ஒருவருக்கு இந்நியமனம் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதால் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப - கல்வி வலயம் அமைப்பதற்கான நடவடிக்கை தாமதிக்கப்பட்டது.
நாங்கள் மறைந்த பெரும் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினதும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினதும் சிறந்த வழிகாட்டலில் அரசியலுக்கு வந்தவர்கள். ஒரு பதவியை ஒருவருக்கு வழங்குவது என பகிரங்கமாக தீர்மானம் எடுத்து விட்டு பின்பு அதற்கு எதிராக செயற்படுவது நயவஞ்சகத்தனமான நடவடிக்கையாகும்.
அரசியல் அதிகாரம் என்பது அல்லாஹ்வினால் வழங்கப்படும் அமானிதமாகும். இதனை நியாயமாக பாவிக்க வேண்டும். குறுகிய காலம் இந்த உலகத்தில் வாழப்போகும் நாம் அரசியலுக்காக நமது மக்களை பிரதேச வாதம் பேசி பிரிக்க முயற்சிப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நீண்ட காலமாக பொத்துவில் பிரதேசத்தில் நிலவிய ஆசிரியர் பற்றாக் குறையை பூர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறைகளை நிபர்த்தி செய்வதற்கும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அமைச்சர் விமலவீர திஸா நாயாக்கா அவர்கள் தியாக மனப்பாங்குடன் உதவியமைக்கு நமது பொத்துவில் பிரதேச மக்கள் என்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எல்லோரும் ஒன்றினைந்து நமது மக்களின் நலனுக்காக அர்ப்பனிப்புடன் செயற்பட வேண்டும். பொத்துவி;ல் பிரதேசத்திற்கு முடிந்தளவு பணிகளை செய்த திருப்தி எனக்கும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும் உள்ளது என அமைச்சர் உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment