வில்பத்துவில் இஸ்லாமிய தீவிர வாதிகளா?

கே.சி.எம்.அஸ்ஹர்-

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை நல்ல மனம் கொண்ட சிங்கள மக்கள் மீதும் விதைக்க பல சேன ,சிஹல உருமய,இராவணசேன ,தர்மபால பரம்பரை ,ஹெல பொது சவிய போன்ற புதியபுதிய இயக்கங்கள் அவ்வப்போது புதிய  புரளிகளை எழுப்பிக் கொண்டே உள்ளன. 

இவர்களின் கட்டுக்கதைகளையும்,குரூர சிந்தனைகளையும் சிங்கள புத்தி
ஜீவிகளும் அரசியல் வாதிகளும் எதிர்த்துக் கொண்டே வருகின்றனர். சுpங்கள முஸ்லிம் உறவு மிகவும் தொன்மையானது பலமானது இதனை யாராலும் சிதைக்க முடியாது.

 (உ-ம்); அண்மையில் கெகிராவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த முஸ்லிம் வாலிபரின் இழப்பைத் தாங்க  முடியாமல் சிங்கள இளைஞர்கள் அழுததையும் அவரின் மையத்தை தோழில் சுமந்து சென்றதையும் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு அவ்விளைஞர்கள் நிதி உதவி செய்ததையும் என்னவென்று சொல்வது.

அழுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தன்னையும் தனது வாகனத்தையும் பாவித்து அதனால்  பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவப் பெருமவின் பணியையும் என்னவென்று சொல்வது. அலுத்கம பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அக்கிராமத்தைச் விட்டு  வெளியேற அதனை அறிந்த அப்பிரதேச பௌத்தமதகுரு மணி அடித்து பௌத்த மக்களை அழைத்து அந்த முஸ்லிம் 
கிராமத்தைச் சுற்றி நின்று பாதுகாத்துக் கொடுத்ததை எப்படி நாம் மறப்பது பெரும்பாலான சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள் ஒரு சிறிய குழுவின் குழப்பத்தால் முஸ்லிம் மக்கள்  தளர்நது விடக்கூடாது. இலங்கை அரசுக்கு ஐ.நா. மனிதயுரிமை மாநாட்டில் மிகவும் ஒரு இக்கட்டான நிலைமைகள் ஏற்பட்ட  சந்தர்பங்களிலும் முஸ்லிம் நாடுகளே கை கொடுத்துள்ளன. அதுமட்டுமின்றி இலங்கைக்கு வட்டியில்லாக்கடன்  வழங்குவதிலும்ää பொருளாதார உதவிகளைச் செய்வதிலும் முஸ்லிம் நாடுகளே முன்னணியில் நிற்கின்றன. 

வேலையில்லாப் பிரச்சினையால் எம்நாட்டு இளைஞர் யுவதிகள் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்  பல இலட்சக்கணக்கானோருக்கு தொழில்களை வழங்கி கொண்டிருப்பதும் வளை குடா முஸ்லிம் நாடுகளே ää மாறாக  பர்மாவோ ääரஷ்யாவோää சீனாவோ இப்படி எம் நாட்டு மக்களுக்குத் தொழில் வழங்குகின்றனவா?

மத்திய கிழக்கிலிருந்து தான் அதிகமான அன்னியச் செலாவனி நாட்டிற்குள் வருக்pன்றது.இலங்கையில் உள்ள  முஸ்லிம்களிடையே பின்வரும் ஆண்மீக இயக்கங்கள் உள்ளன.

01.தப்லீக் ஐமாஅத்

02.தௌஹீத் ஐமாஅத் 

03.ஜமாஅதே இஸ்லாமி 

தப்லீக் ஐமாஅத் ஆண்மீகப்பணியை மட்டும் செய்துவருகிறது. மாறாக தௌஹீத் ஐமாஅத்தும்,ஜமாஅதே இஸ்லாமியும் ஆண்மீகப்பணியையும் , சமூக சேவைகளையும் ,ஜீவனோ பாய உதவிகளையும் , இரத்தம் வலங்கள் போன்ற பணிகளையும் செய்து வருகனிறது. இதைச் சரியாக புரிந்து கொள்ளாமல் இவர்களை தீவிரவாதிகள் என்றோ அடிப்படை வாதிகள் என்றோ குறிப்பிடுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஏதும் சந்தேகம் இருப்பின் சட்டப்படி பரிசீலனை செய்து கொள்ளலாம். ஒரு பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்பட்டால் அங்கு இவ்வியக்கங்கள் உதவி செய்யச் செல்கின்றன. இதில் என்ன தவறு இருக்கின்றது. இது பயங்கரவாதமா? அடிப்படை வாதமா? “இந்தியா சொல்கிறது இலங்கையில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதாக ஆனால் இலங்கை புலனாய்வுத் துறை கூறுகிறது அப்படி எந்ந முஸ்லிம் இயக்கமும் இலங்கையில் இல்லையென்று” இப்பொழுது ஹெலபொதுசவிய சொல்கிறது இந்தியாவில் இருந்து முஸ்லிம் தீவிர வாதிகள் (முஸ்லிம் அடிப்படை வாதிகள்); வில்பத்து கடற்கரையினூடாக இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் போதை வஸ்துக்களை கொண்டுவருவதாகவும் ஒரு முஸ்லிம் பிரதேசத்தை மன்னாரில் அமைந்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. 

இக்கதைகளை பார்க்கும் போதே கற்பணை என்பது புரிகிறது. வடமாகாணத்தில் உள்ள கடற்கரை பிரதேசம் முழுவதும் கடற்படையினரால் 100;;;;;;;;;;சதவீதம் கட்டுப்பாட்டில் உள்ளது. என்பது யாவரும் அறிந்ததே மீள்;குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் அவர்கள் வில்பத்து எல்லை கிராமங்களுக்குச் சென்று(மறிச்சுக்கட்டிபாலைக்குழி,கரடிக்குழி,முள்ளிக்குளம்) உண்மை நிலைமைகளை அறிந்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக முஸ்லிம் நாடுகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் போது அதனை பார்த்து விட்டு அடிப்படை வாதம் தீவிர வாதம் என்பது அறியாமையைத் தவிர வேறு ஒன்று மில்லை. 

உதவி செய்பவர்கள் தொடர்பான தகவல்கள் அரபு மொழியில் போடப்பட்டிருப்பின் அதனைப் பார்வையிடும் சிலர் பிழையாக விளங்கிக் கொள்கின்றனர்.அப்படியென்றால் எமது நாட்டின் சிங்கள மொழி முஸ்லிம் 
நாடுகளில் உள்ள தூதர்கள் கூட கையாளப்படுவதில்லையா.இது மொழி இதற்கு ஏன் பயப்பட வேணடும்.

ஒரு குறுகிய காலத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான பல புதிய புதிய இயக்கங்கள் ஏன் களம் இறங்கியுள்ளன.இக்கட்டத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது. நிதானம் அடக்கம் பொறுமை இறைபக்தி எமக்காக வஜிர தேரர் ,தம்பர அமிலத்தேரர்தி.மு.ஜெயரத்ன(பிரதமர்) டிலான் பெரேரா அமைச்சர் வாகதேவ நாணயக்கார அமைச்சர் டீ.யு குணசேகர அமைச்சர் தேவப் பெரும பாராளுமனற் உறுப்பினர் கண்டிப்பிரதேச சிங்கள மக்கள் குருநாகல் சிங்கள மக்கள் எனப் பலர் உதவுவதற்காக வந்து கொண்டே இருப்பார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :