பொது இடங்களில் வெற்றிலையை குதப்பி துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
பொது இடங்களில் வெற்றிலையை குதப்பி துப்புவதால் சூழல் பாதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, பொது இடங்களில் மது போதையில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும் பொது மக்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கால்நடைகளை பொது இடங்களில் விடுதல், அவற்றை பொது நீர்நிலைகளில் குளிப்பாட்டுதல், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீதியோரங்களில் வாகனங்களை கழுவுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 comments :
Post a Comment