வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 22 வருடங்களுக்கு மேலாக அகதிகளாக வாழும் முஸ்லிம் மக்களை காட்டி அவர்களுக்கு வீட்டுத் திட்டம் அமைத்து கொடுப்பதாகக் கூறி அமைச்சர் ரிஷாத் பதுருதீன் தமது அமைச்சுக்கு 18 கோடி ரூபா பணத்தை பெற்றுள்ளமையால் பாரிய இராஜதந்திரிக பிரட்ச்சினைகள் ஏற்ட்பட்டுள்ளதக ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அகதி முகாம்கள் இல்லை, மீள் குடியேற்றம் முற்று முழுதாக நிறைவடைந்துள்ளதாக அரசு கூறி வருகின்ற நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் முக்கியமான அமைச்சர் ஒருவர் நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை காட்டி வெளி நாட்டு பண உதவிகளை பெற்றுகொள்வதில் இலங்கை அரசு இராஜதந்திரிக ரீதியில் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளது.
வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்துடன் முஸ்லிம் மக்கள் அகதிகளாக சித்தரிக்கப் படும் வீடியோ காட்சிகளையும் அனுப்பியுள்ளதால், யுத்தக் குற்றச்சாட்டு மனித உரிமை மீறல் சம்பந்தமான சர்வதேச விசாரணைகளின் போது நாட்டுக்கு அபகீர்தி ஏற்ற்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை சம்பந்தமாக ஐரோபிய நாடுகளின் தூதரக வட்டாரங்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் இதன் மூலம் தற்போதய ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடம் போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment