பொதுபலசேனாவின் பௌத்த சமய எழுச்சிக் கூட்டமொன்று குருநாகல், மாவத்தகம நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்படுகிறது .
மாவத்தகம சாமோதய மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறப்புரையாற்றவுள்ளார். எனவும் அறிவிக்கப்படுகிறது மாவத்தகம நகரிலுள்ள வாராந்த பொதுச் சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுவது வழமையாகும். இந்த சந்தையில் பொருட் கொள்வனவிற்காக முஸ்லிம் கிராமங்களிலிருந்து பலர் வருகை தருவர். இந்த நிலையிலேயே குறித்த தினத்தில் மாவத்தகம நகரில் பொதுபலசேனாவின் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த கூட்டத்தை நடாத்த பொலிசாரின் அனுமதி வழங்கப் பட்டுள்ளதா என்பது தொடர்பில் தெரியவில்லை. ஞானசார தேரர் அளுத்கம மேடைபேச்சுக்கு பின்னர் அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடித்து பலர் கொல்லப் பட்டதுடன் பல கோடி ரூபா சொத்துக்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு ,வெளிநாடு அழுத்தங்களை தொடர்ந்து இன விரோதத்தை தூண்டும் கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பதாக அண்மையில் அரசாங்கள் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
lm

0 comments :
Post a Comment