இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்களை வெற்றி இலக்காக தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.
காலியில் இடம்பெற்று வரும் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
எல்கார், டுமினி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உபுல் தரங்க 83 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 89 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
163 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை பெற்ற வேளை தனது 2 ஆவது இன்னிங்சை நிறுத்திக் கொண்டது.
டிவில்லியர்ஸ் அதிக பட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
370 ஒட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
குமார் சங்கக்கார 58 ஓட்டங்களுடனும் கௌசல் சில்வா 37 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர். 5 ஆவதும் இறுதியுமான நாளை இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 9 விக்கெட்டுகள் கையிலுள்ள நிலையில் 260 ஓட்டங்களைப் பெற வேணடும்.

0 comments :
Post a Comment